நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை


நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று (11)  தெரிவித்துள்ளார்.


மழைவீழ்ச்சி குறைந்துள்ளமையினால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு எவ்வித வெள்ள அபாயமும் உருவாகவில்லை என எல்.எஸ்.சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.