Header Ads



இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய 5 கோடி


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 5.5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.


இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.


இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது. இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.


2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது. 

No comments

Powered by Blogger.