வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதல் - 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்


மூதூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான தமிழ்ச்செல்வன் தனேஸ் (வயது 22), வெளிநாட்டில் இருந்து வருகை தந்த அருணவன் செல்வரெத்தினம் (வயது 19) ஆகிய உறவினர்களான இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.


ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

No comments

Powered by Blogger.