எந்த உண்மையும் இல்லை
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
"திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தாய் மற்றும் தந்தையின் பெயர்கள் தேவையில்லை எனப் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அமைச்சர் கூறியதாகச் சில போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திட்டமிட்டுப் போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment