Header Ads



உலகளவில் முன்னேறிய இலங்கை கடவுசீட்டு


இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே விசா (Visa on Arrival) பெற்றுக்கொண்டு 39 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தரவரிசை, முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது. இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


2026 தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். 

No comments

Powered by Blogger.