முக்கிய அறிவித்தல்
இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் மக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், 19 வயது இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment