150 ரூபா மேலதிகமாக அறவிட்டமைக்காக 3 மில்லியன் அபராதம்
இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.
எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்.

Post a Comment