அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்கும் ஜனாதிபதியில் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானங்களின்படி, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கு அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இனிவரும் தேர்தல்களில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறை இல்லாமல் போவதுடன், அடையாள அட்டையைச் சரிபார்க்கும் முறை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

Post a Comment