பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு தக்க பாடம் புகட்டத் தயாராகும் அரசாங்கம்
பல பெற்றோர்கள் தங்களது முதுமைக் காலத்தில் பிள்ளைகள் தங்களை அரவணைத்துக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே சொத்துக்களை பிள்ளைகளின் பெயருக்கு மாற்றுகிறார்கள். ஆனால், சொத்துக்கள் கைக்கு வந்தவுடன் வயதான பெற்றோரைக் கைவிடுகின்ற அல்லது அவர்களுக்கு எந்தவித ஆதரவும் வழங்காமல் நடுத்தெருவில் விடுகின்ற ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண்பதற்கான தேவையான சட்டமூலங்களை வரைவாக்கம் செய்யும் பணிகளில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ், இவ்வாறான சூழ்நிலைகளில் பிள்ளைகளுக்கு மாற்றப்பட்ட சொத்துக்கள், சட்டப்பூர்வமாக அரசாங்கத்தின் காவல் அல்லது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
அந்த சொத்துக்கள் மூலம் ஈட்டப்படும் வருமானம் அல்லது நிதியானது, பாதிக்கப்பட்ட பெற்றோரின் நலன்புரிச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும். கைவிடப்பட்ட முதியவர்களைப் பராமரிப்பதற்காகப் பராமரிப்பாளர்களை நியமிக்க அல்லது தேவைப்படின் அவர்களைத் தரமான முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கான கட்டணங்களை இந்த நிதியின் மூலம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

Post a Comment