Header Ads



எதிரிகளை வேட்டையாடுவதே தற்போது, நாளாந்தச் செயல்பாடாக உள்ளது


தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் அரச ஊழியர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


"கடந்த காலங்களில் அரச ஊழியர்களுக்குத் தவணை முறையில் வாகனங்களை வாங்குவதற்கான வசதிகள் செய்து தரப்படும் என கனவுகள் காட்டப்பட்டன.


12 இலட்சத்திற்கு விட்ஸ் (Vitz) கொள்வனவு செய்வது ஒருபுறமிருக்க, இன்று 20 கிலோ அரிசியைக் கூட தவணை முறையில் கடனுக்கு கொள்வனவு செய்து உண்ணும் அளவிற்கு அரச ஊழியர்களின் நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளது .


அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக நீண்ட வரிசையில் நின்று தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த அச ஊழியர்களை, இன்று அமைச்சர்கள் பகிரங்கமாக 'திருடர்கள்' என அவமதிக்கின்றது.


வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் அரச ஊழியர்களை இந்த அளவிற்கு அவமதித்ததில்லை.


நாட்டை முன்னேற்றுவதற்கோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கோ அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை.மாறாக, அரசியல் பழிவாங்கல்களும், ஒரு சில அதிகாரிகளின் கருத்துக்களைப் பேணுவதுமே இந்த அரசாங்கத்தின் இருப்பாக மாறியுள்ளது. விவசாயிகளை அவமதிப்பதும்,பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதுமே தற்போதைய ஆட்சியின் நாளாந்தச் செயல்பாடாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.