Header Ads



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப் பொருளுடன் பிடிபட்ட மாணவன்


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் மாணவர் தகுதியை இரத்து செய்யவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட அந்த மாணவர், கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்றவர் என பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அவரது விடுதி அறையைச் சோதனையிட்டது.


இதன்போது அங்கு போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, போதைப்பொருட்களை எடைபோட்டுப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தராசு மற்றும் ரூ. 75,000 பணத்தையும் அந்த மாணவரிடமிருந்து ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் கண்டெடுத்தனர். 

No comments

Powered by Blogger.