Header Ads



37 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர் கைது



37 கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகையுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


'கோல்ட் ரூட்' பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே,கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த,  23 வயது பல்கலைக்கழக கல்வி மாணவர். போதைப்பொருள் தொகையுடன் கனடாவிலிருந்து டுபாய் ஊடாக நேற்று இரவு 11.15 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


இவ்வளவு பெரிய மதிப்புடைய "ஹசீஸ்" போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது.

No comments

Powered by Blogger.