Header Ads



நாட்டில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணி


நாட்டில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மற்றும் தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தச் சேவையானது இலங்கையின் டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும்.


குறிப்பாக, உலகச் சந்தையில் தமது சேவைகளை வழங்கும் திறமையான இளம் தலைமுறையினர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் (Freelancers), தமக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நிலவும் தடைகள் இதன் மூலம் நீக்கப்படும்.

No comments

Powered by Blogger.