பள்ளிவாயல்களின் ஒலிவாங்கிகளது அளவு மீறிய சத்தம்
மதிப்பிற்குரிய இமாம்களே, முஅத்தின்மார்களே மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகளே!
பள்ளிவாசல்களுக்குள் ஒலியின் அளவைக் குறைப்பது சம்பந்தமாக……
பெரும்பாலான பள்ளிவாசல்களுக்குள் ஒலிபெருக்கிகளது சப்தம் மிக அதிகமாக இருக்கிறது. இதன் விளைவுகள் பல:-
இது பள்ளிக்கு வருவோர் தமது வணக்க வழிபாடுகளில் முழுமனதோடும் பக்தியோடும் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கிறது.
எல்லை கடந்த சப்தம் அல்லது இரைச்சலானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இது காது கேளாமை முதல் மாரடைப்பு வரையுள்ள பல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
⭕️ தொடர்ந்து 60-70 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்பது செவி நரம்பை செயலிழக்கச் செய்து,காது கேளாத தன்மையை உண்டாக்கும்.
நீண்ட நேரமாக அதிக ஒலி காதில் விழுந்தால் அது நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சாதாரண சப்தம் 10 டெசிபலை விட அதிகரித்தால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேவையற்ற இரைச்சலானது மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
அதிக சப்தம் தூக்கத்தைக் கெடுத்து,தலைவலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
எனவே, ஒலிபெருக்கிகளின் அதிக இரைச்சலை தவிர்த்து இபாதத்களில் அனைவரும் முழுமையாக கவனம் செலுத்தும் வகையில் அவற்றின் VOLUME ஐ காதுகளுக்கு இதமான அளவில் குறைத்து வைத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
உனது சப்தத்தை தாழ்த்திக் கொள்வீராக! (அல்குர்ஆன் 31:19)
உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர். மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. (17:110)
இவ்வண்ணம்
✍️ Dr. Manaff Sheriff
(NHSL, Colombo)
✍️ Dr.Zaffrulla Wazeer
(National Hospital,Kandy)
✍️ Dr.Milhan Bahar
(Apexa Hospital, Maharagama)
✍️ Dr. Rizney Sakkaf
(District General Hospital, Negombo)
✍️ Dr.Akram Drahaman,
(Army Hospital)
✍️ Dr.M. M.Mohamed,
(Wye Valley NHS Trust, UK)
(All are Doctors and ENT Head & Neck Surgeons)

Post a Comment