மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதம் ஏற்படும்
மகிந்த ராஜபக்சவை ஏதேனும் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று திஸ்ஸகுட்டி ஆரச்சி எச்சரித்துள்ளார்.
நாமல் தேர்தலில் போட்டியிட்ட போது கிடைத்த வாக்குகளைக் கொண்டு மகிந்தவுக்கு சொற்பமான மக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக அரசாங்கம் கருத முயன்றால் அது தவறாகும். நாமலின் தேர்தல் பெறுபேறு வேறு, மகிந்தவுக்கான ஆதரவுத் தளம் வேறு.
எனவே மகிந்த ராஜபக்ச மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவர் மீது கைவைக்க அரசாங்கம் துணியுமாக இருந்தால் இலட்சக்கணக்கான மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் அணிதிரள்வார்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் எச்சரித்துள்ளார்.

Post a Comment