15 கொலைகளை வழிநடத்திய சோபனஹந்தி சனத் டி சில்வா
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கரந்தெனிய சுத்தா'வின் சகோதரரான 'SF ராஜு' என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, சுமார் 15 கொலைகளைத் தான் வழிநடத்தியதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிகவின் கொலையைத் தானே திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரன் சிறையில் இருந்தபோது, அவரை மிகக் கடுமையாகச் சோதனை செய்ததோடு, உணவு மற்றும் பார்வையாளர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியமையே இந்தப் பழிவாங்கலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment