Header Ads



'Rebuilding Sri Lanka' நிதி தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சரின் பதில்


'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைத்த பணம் திறைசேரியில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர் அமைச்சர் Dr அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.  நிதியம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு 9,583 மில்லியன் ரூபாய் கிடைத்தது.  598டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 500 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது. 


இதற்காக 'Rebuilding Sri Lanka' நிதியத்திலுள்ள 10 பில்லியன் ரூபாய் பணத்தையும் பயன்படுத்த முடியும். ஏனைய 490 பில்லியன் ரூபாயை மாத்திரமே அரசாங்கம் மேலதிகமாகப் பெற்ற வேண்டியிருக்கும்.  நிதியம் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.