Header Ads



கல்லீரல் நோயினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை உயருகிறது


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டின் நகர்ப்புற மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  இரைப்பை குடல் விசேட மருத்துவ நிபுணர் பியல் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.


கிராமப்புற மக்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற மக்களிடையே இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் அன்றாட உடல் உழைப்பு குறைதல் ஆகியவையே இதற்குக் காரணம்.


கொழும்பு, கம்பஹா  நகரங்களில் இதன் தாக்கம் அதிகம். பெரும்பாலான நோயாளிகள் தற்செயலாகவே இந்த நோயைக் கண்டறிகின்றனர். வேறு நோய்களுக்காக மருத்துவரை நாடும்போது அல்லது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்யும்போது கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது.


கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவது நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற தொற்றாத நோய்களுடன் நெருங்கிய தொடர்புடையது  என்றார்.

No comments

Powered by Blogger.