சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்..
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுரகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
மலர்ந்துள்ள பராபவ சித்திரை புத்தாண்டுக்கான தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்துவதுடன், எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என அழைப்பு விடுத்து, பிறந்துள்ள இச்சித்திரை புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment