மத்திய கிழக்கு போர் - இலங்கைப் பேராசிரியர் வழங்கியுள்ள ஐடியா
மத்திய கிழக்கு போர் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் தற்போதைய நிதி ஸ்திரத்தன்மை காரணமாக 2022 ஆம் ஆண்டு போன்ற பாரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்
2022 ஆம் ஆண்டை விட தற்போது இலங்கைப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அப்போது எரிபொருள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை, ஆனால் இப்போது டொலர் கையிருப்பு உள்ளது. விநியோகப் பாதைகள் முடங்கியுள்ளதே தற்போதைய பிரச்சினையாகும் எனத் தெரிவித்தார்
எனினும் இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசியமான குடிநீரை இலங்கை ஏற்றுமதி செய்ய முடியும். இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment