ஈரானின் அந்த நட்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்...
ஈரானிலிருந்து எரிபொருள் பெறுவதைப் பொறுத்தவரை, தற்போது கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்தத் திறன் இல்லை. ஆனாலும், ஈரானின் அந்த நட்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.
இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்த கருத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.
ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை தர உள்ளார். அப்போது இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.
- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -

Post a Comment