'உயிர்த்த ஞாயிறு மறைகரம் வெளிப்பட்ட போது' நூலுக்கு விருது
பேராசிரியர் ராஜன் ஹூல் (Prof. Rajan Hoole) ஆங்கிலத்தில் எழுதிய, சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த 'உயிர்த்த ஞாயிறு மறைகரம் வெளிப்பட்ட போது' என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான 'துரைவி விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான பி.பி. தேவராஜ் அவர்களிடமிருந்து நூலின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு ஓய்வுபெற்ற, அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய இந்த ஆய்வு நூல், இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள மர்மங்கள் மற்றும் உண்மைகளைத் தர்க்கரீதியாக விவரிக்கிறது.

Post a Comment