A/L பெறுபேறுகள் வெளியானது - www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையங்களில் பெற முடியும்
2025ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Post a Comment