Header Ads



ரமழான் (30) கேள்வி


A. பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியாகச் செல்வதும், திரும்பும்போது வேறொரு வழியாகத் திரும்புவதும் நபிகளாரின் சுன்னத்தாகும். ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "பெருநாள் வந்துவிட்டால் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது பாதையை மாற்றிக் கொள்வார்கள்." இந்தச் சுன்னத்தின் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்?


B. பெருநாள் தொழுகைக்கு ஆண்களைப் போலவே பெண்களும் செல்ல வேண்டும் என்று நபிகளார் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டோம்." அப்போது ஒரு பெண்மணி, "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஜில்பாப் (மேலங்கி) இல்லையென்றால் என்ன செய்வது?" என்று கேட்டார். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள் அளித்த தீர்வு என்ன?

No comments

Powered by Blogger.