Header Ads



ரமழான் (29) கேள்வி

A. ஹுனைன் போரின் போது, முஸ்லிம்கள் மத்தியில் ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. அந்த நேரத்தில் கர்பிணியாக இருந்த ஒரு பெண் சஹாபி, போர்க்களத்தில் மிகவும் துணிச்சலாகக் காணப்பட்டார். அவர் தனது இடுப்பில் ஒரு கத்தியை  மறைத்து வைத்திருந்தார். இதைக் கண்ட அவரது கணவர் அபூ தல்ஹா (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! இதோ உம்மு ஸுலைம் கத்தியுடன் இருக்கிறார்" என்று நபிகளாரிடம் தெரிவித்தார். நபிகளார் (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைமிடம் அந்தக் கத்தியைப் பற்றி கேட்டபோது, "எதிரிகளில் எவரேனும் உங்களை நெருங்கினால், இதைக் கொண்டு அவரது வயிற்றைக் கிழித்துவிடுவேன்" என்று துணிச்சலுடன் பதிலளித்தார். இத்தகைய வீரத்தைக் காட்டிய உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் இயற்பெயர் என்ன?


B. ரமழான் நோன்பின் போது நிகழ்ந்த வீணான காரியங்களுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும் 'ஸதக்கதுல் ஃபித்ர்' கடமையாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவை இஸ்லாம் மிகவும் துல்லியமாக வரையறுத்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் படி, ஒருவர் பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஃபித்ரா தர்மத்தை வழங்கினால், அது கடமையான 'ஸதக்கதுல் ஃபித்ர்' ஆகக் கருதப்படாது என்று கூறப்படுகிறது. இந்தச் செய்தியை உள்ளடக்கிய அந்த ஹதீஸின் அரபு வாசகத்தை அல்லது அதன் பொருளை ஆதாரமாகக் குறிப்பிடுக.



No comments

Powered by Blogger.