Header Ads



UAE அமீர் முஹம்மத் பின் ஸாயித் ஆல்-நஹ்யான் மரணமடைந்தாரா (?)


அமீரக அமீர் முஹம்மத் பின் ஸாயித் ஆல்-நஹ்யான் மரணமடைந்து விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவுகின்றன.


திடீரென மூளைக்கு செல்லும் குறுதி சுற்றில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமீரகத்திற்கான பல வெளிநாட்டு தலைவர்களின் வருகைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இடம் பெறும் செயற்கை நுண்ணறிவு இம்பக்ட் மாநாட்டிற்கு அவர் சார்பாக  இளவரசர் காலித் பின் முஹம்மத் பின் ஸாயித் புறப்பட்டுச் சென்றுள்ளார்.


நேற்று முன்தினம் துருக்கி அதிபர் அமீரகம் வரவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டது.


ஷெய்க் முஹம்மத் பின் ஸாயித் மூளையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுவதால் தனது விஜயம் இரத்து செய்யப்பட்டதாகவும் விரைவில் சுகம் பெற பிரார்திப்பதாகவும் ஆர்டோகான் பதிவிட்டு பின் சுகவீனம் பற்றிய தகவல் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பலஸ்தீன், காஸா, ஈரான், யமன், லிபியா, சூடான் என பல மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களில் வரம்புமீறிய தலையீடுகள் பிழையான அரசியல் இராஜதந்திர இராணுவ நிலைப்பாடுகள் நகர்வுகளை மேற் கொண்டதால் அமீரகத்திற்கு உள்ளேயும், வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கு மத்தியிலும், மத்திய கிழக்கிலும், ஆபிரிக்க நாடுகளிலும் (பரவலாக அரபு முஸ்லிம் உலகிலும்) வேண்டப்படாத ஒருவராக பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார்.


குறிப்பாக யமன்  சூடான் விவகாரங்களில் ஸவூதி அரேபியாவுடன் ஏற்பட்ட முருகல் நிலை முற்றிய நிலையில் எகிப்து கத்தார் தலைவர்கள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டனர்.


கடந்த வாரம் எகிப்து தலைநகர் சென்ற  அவரை நேற்று முன்தினம் கத்தார் அமீர் தமீம் அபூதாபி சென்று சந்தித்தமை குறிப்பிடத்தக்கது, இரு தலைவர்களும் ஸவூதி அரேபியா இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் செய்திகளை எத்தி வைத்ததாக சொல்லப்படுகிறது!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

முன்னாள் கொன்ஸல் ஜெனரல் - ஜித்தா

முன்னாள் கொன்ஸுலர் அலுவலர் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள்- கொழும்பு

முன்னாள் அரசியல் ஆய்வாளர், ஸவூதி அரேபியா மற்றும் கத்தார் தூதரகங்கள் - கொழும்பு

17.02.2026

No comments

Powered by Blogger.