ஆசிரியையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்லும்போது விபரீதம்
தனது முன்பள்ளி ஆசிரியையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகத் தாய் மற்றும் சகோதரனுடன் மாவத்துர பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உட்புற இரத்தப்போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகக் கம்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சசிந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இச்சிறுமியின் தாயாரான குமாரி ஹேரத்தின் கை ஒன்று முறிவடைந்துள்ளது.
கவனக்குறைவாகக் காரைச் செலுத்திய நாவலபிட்டிய, அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஓய்வுபெற்ற குணபால ஜெரால்ட் காமிணி சுபசிங்க, கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(அததெரண)

Post a Comment