கொழும்பு துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் உயிரிழப்பு
கொழும்பு - ஜிந்துப்பிட்டியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் மன்னார் - முசலி, பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய நண்பர் சகிதம் தலைமுடி வெட்ட சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்திற்குள் நேற்று இரவு உள்நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதன்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னாரைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

Post a Comment