Header Ads



அம்பியூலன்ஸ் விமானம் விபத்தில், அனைவரும் உயிரிழப்பு


இந்தியா - ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில், நேற்றிரவு இடம்பெற்ற அம்பியூலன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.


இவ்விமானத்தில் இரு விமானிகள், ஒரு நோயாளி, இரு உதவியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு துணை மருத்துவ உதவியாளர் என மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர்.


விபத்து ஒன்றில் 63% தீக்காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை, மேலதிக சிகிச்சைக்காக ஜார்க்கண்ட் தலைநகர் ரஞ்சியிலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்ற போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.


மீட்புக் குழுவினர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் நடந்தே சென்று, விமானத்தின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டனர். சடலங்கள் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.