வங்கத்தில் இன்று தேர்தல் - ஜமாஅத் அணி வெற்றி பெறுமா...?
மொத்தமுள்ள முந்நூற்று ஐம்பது தொகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஷேக் ஹஸீனாவின் அரசால் தடை செய்யப்பட்டிருந்த பங்களா தேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி(BNP) கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமி தனிக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
முதன்மையான போட்டி எனில், அது BNP கூட்டணிக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி கூட்டணிக்கும்தான்.
போராட்டத்தில் ஈடுபட்டுப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாணவர்களும் ஒரு கட்சி தொடங்கியுள்ளனர்.
நேஷனல் சிட்டிஸன் பார்ட்டி(NCP) - இது மாணவர்கள் உருவாக்கியுள்ள கட்சியின் பெயர்.
நற்செய்தி என்னவெனில் NCPஜமாஅத்தே இஸ்லாமி கூட்டணிக்குத் தன் ஆதரவைத் தந்துள்ளது.
பெரும்பாலான முஸ்லிமல்லாத சிறுபான்மை மக்களின் ஆதரவும் ஜமாஅத் கூட்டணிக்குத்தான் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஜமாஅத் தலைமையில் ஆட்சி அமையுமேயானால் அது ஆகச் சிறந்த திருப்புமுனையாக இருக்கும்.
தேர்தல் முடிவு இன்று மாலை அல்லது நாளை காலை தெரிந்துவிடும்.
-சிராஜுல்ஹஸன்

Post a Comment