வரலாற்றில் முதன்முறையாக..
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment