அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தி மோசடி - பிக்கு கைது
அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி வட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மோசடியான முறையில் பணத்தைச் சேகரித்த பிக்கு ஒருவர், இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முருதலாவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த போதே இந்த 21 வயதான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகவெனத் தெரிவித்து, மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட பல கடிதங்களும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment