Header Ads



இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது


இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த இன்று  (24) பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.


இருப்பினும், இந்த நிலக்கரி விநியோக டெண்டர் நடைமுறையில் எவ்வித மோசடியும் அல்லது ஊழலும் இடம்பெறவில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


தரமற்ற நிலக்கரி விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையானது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தரக்குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், அந்தப் டெண்டர் வழங்கப்பட்ட விதத்தில் முறைகேடுகளோ அல்லது ஊழலோ இடம்பெறவில்லை. தரமற்ற நிலக்கரியால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை அறவிடுவதற்கு முறையான பொறிமுறையும் அளவுகோல்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.


அந்த விதிகளின்படி உரிய இழப்பீடு வசூலிக்கப்படும். கடந்த கால அரசுகளைப் போல் அமைச்சரவை தீர்மானங்களின் ஊடாக தன்னிச்சையாக விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்யாமல், தற்போது மிகவும் வெளிப்படையான விலைமனு கோரல் நடைமுறைகளையே அரசு பின்பற்றி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.