Header Ads



அமரகீர்த்தி அதுகோரளவை படுகொலை செய்ய, தூண்டுதலாக செயல்பட்டவர்கள் சுதந்திரமாக உள்ளனர்


அமரகீர்த்தி அதுகோரளவை படுகொலை செய்ய தூண்டுதலாக செயல்பட்டவர்கள் சுதந்திரமாக உள்ளனர் என பொதுஜன முன்னிலையில் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம்  குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


அப்பாவி மக்கள் வீதியில் படுகொலை செய்யப்படும் அளவிற்கு குரோதத்தை விதைத்த நபர்கள் இன்று நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பதவிகளிலும் நாடாளுமன்றம் அமர்ந்திருக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


குறிப்பாக JVP யின் தலைவர்களுக்கு எதிராகபொதுஜன முன்னணியின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறான நபர்கள் ஆட்சியில் இருக்கின்ற சூழலில் கூட நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பொன்றை வழங்குவதற்கு வலுவடைந்தமை தொடர்பில் தாம் நீதிமன்றை தலை வணங்கி நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.