இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு..
கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு "மனிதாபிமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான" தீர்வை வழங்குமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் தனது கடிதத்தில், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதி முகாம்களிலும் அதற்கு வெளியேயும் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 40 சதவீதமானோர் இந்தியாவில் பிறந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 பேருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்காளர் உரிமையைப் பெற்றுள்ளார்.

Post a Comment