பாகிஸ்தான் விடயத்தில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பாகிஸ்தானை அனைத்து "எதிர்மறை" விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைகளுக்கான பயண வசதிகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இந்த முடிவு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்குப் பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவாலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

Post a Comment