Header Ads



ரமழான் (8) கேள்வி

A, நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோது, மக்கள் அவர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அவர்கள் ஆற்றிய முதல் உரையில் மனிதநேயமிக்க நான்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்கள். அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த புகழ்பெற்ற ஹதீஸில் இடம்பெற்றுள்ள அந்த உபதேசங்கள் யாவை?


B, 'சுவர்க்கத்தில் தங்களுடன் நான் நெருக்கமாக இருக்க வேண்டும்' எனப் பேராவல் கொண்ட ஒரு நபித்தோழர் நபிகளாரிடம் வேண்டினார். அதற்கு நபிகளார் (ஸல்) அவர்கள், 'உனது விருப்ப நிறைவேற்றத்திற்காக அதிகப்படியான ஸுஜூதுகள் மூலம் எனக்கு உதவி செய்' எனப் பதிலளித்தார்கள். அந்த உயர்ந்த அந்தஸ்தைக் கோரிய அந்தத் தோழர் யார்?



No comments

Powered by Blogger.