Header Ads



மரணித்த தாயின் 16வது நாள் சடங்கு தினத்தில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்தளித்த மகன்


கேரள மாநிலம் கொடுங்கல்லூர்  இடவிலங்கு நடுமுறிவீட்டில் வசித்த காலஞ்சென்ற சந்திரன் மனைவி தங்கம்  இரு வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.


முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இடவிலங்கு கிராமத்தில் அத்தனை குடும்பத்தாரோடும் மிகவும் இணக்கமான நட்பும் உறவும் காட்டிய தங்கம், தனது வீட்டுக்கு உதவி கேட்டு யார் வந்தாலும் தன்னாலியன்றதை கொடுக்கும் தயாள குணம் மிக்கவர்.


மரணத்திற்கு பிறகு தனது உடலை மருத்துவமாணவர்கள் பயிற்சிக்காக தானமாக கொடுக்க வேண்டும் என்று தங்கம் ஏற்கனவே மகனிடம் கூறியிருந்தால் அவரது குடும்பத்தினர் திருச்சூர் மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்தனர்.


தாய் மரணமடைந்த 16வது நாள் சடங்குகள் நடத்த தீர்மானித்த குடும்ப உறுப்பினர்கள் தற்போது ரமலான் மாதம் என்பதால் ஊரிலுள்ள முஸ்லிம் குடும்பங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் நேற்றைய தினம் நோன்பு துறப்பு நிகழ்வாகவே நடத்தி  இடவிலங்கு கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இப்தார் விருந்தளித்த மரணித்த தங்கம் மகன் பிரசாந்த் கூறும் போது வாழும் காலம் வரை அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுடன் அன்பாக இணக்கமாக வாழ்ந்த எங்கள் தாயின் வாழ்க்கை  "ஒரு நிஜமான கேரள ஸ்டோரி" என்று  கூறினார்.

Colachel Azheem

No comments

Powered by Blogger.