அப்துல் கபூர் நமீஸ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்
கனடா வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கிடையிலான சந்திப்பொன்று, நேற்று (14) கனடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது "Abdul Gaffoor Foundation" நிறுவனர், அப்துல் கபூர் நமீஸுடைய சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை JMC international மற்றும் அபாபீல் உதவும் கரங்கள் ஸ்தாபகர்களில் ஒருவரான ரமழான் அப்துல் மஜீத் வழங்கி வைத்தார்.
சமூக சேவைக்கான கௌரவ விருது“மனிதருள் மாணிக்கம்” ABDUL GAFFOOR NAMEEZ (Founder – Abdul Gaffoor Foundation)“மனிதனில் சிறந்தவன், சகமனிதனுக்கு பயன்படுகின்றவன்.”பல மனிதர்களின் வாழ்வில் ஒளி சேர்க்கும் உங்கள் மகத்தான பணி என்றும் வெற்றியின் ஒளியாகப் பிரகாசிக்கட்டும்
வாழ்த்துச் மடல்
மனிதருள் மாணிக்கம் எனும் கௌரவம் பெற்ற நாள் இன்று உங்களால் பிரகாசிக்கிறது!
மாணவர்களுக்காக அர்பணிப்புடன் உழைத்தும், மக்களுக்காக அன்புடனும் சேவை செய்தும் சமூகத்தின் இதயத்தில் இடம்பிடித்துள்ளீர்கள்.
உங்கள் தன்னலமற்ற பணியாற்றும் மனப்பாங்கும்,வாழ்த்தி வழிகாட்டும் வல்லமையும் பலரின் வாழ்வில் வெளிச்சமாக விளக்குகின்றன.
இத்தகைய மகத்தான பணிவும் பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு “மனிதருள் மாணிக்கம்” எனும் கௌரவம் ABDUL GAFFOOR NAMEEZ ஆகிய உங்களுக்கு வழங்கப்படுவது உண்மையிலேயே பொருத்தமான அங்கீகாரம்.
உங்கள் சேவை என்றும் வளர்ந்து, பலரின் உத்வேகமாக நீடிக்கட்டும். உங்களை பாராட்டி கௌரவிப்பத்தில் சமூகம் சார்பாகவும் பெருமை கொள்கிறோம்.
Abdul Majeed Ramlan




Post a Comment