இலங்கை மக்களும், பொருளாதாரமும் இலகுவில் வீழ்ந்து விடக்கூடிய மனநிலையில் இல்லை
இலங்கை மக்களும் பொருளாதார சரிவுகளை சந்திக்கின்ற வேளைகளில் இலகுவில் வீழ்ந்து விடக்கூடிய மனநிலையில் இல்லை என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களை காட்டிலும் வித்தியாசமானது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்தாலும் எழுந்து வரக்கூடிய பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இருவிடயங்களையும் அடிப்படையில் வைத்து நோக்குமிடத்து டிட்வா பேரனர்த்தத்தையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் கடந்து வரக்கூடியவர்களாக இலங்கை மக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Post a Comment