Header Ads



கல்வியே அழியாச் செல்வம்


நிந்தவூரில் Nintavur Wisdom College- (NWC) இனை கலாநிதி அலவி ஷரீஃப்டீன் திறந்து வைத்தார்.


CHA அமைப்பினால் கடந்த ஆறு வருடங்களாக நிர்வகிக்கப்பட்டு வரும் Nintavur Wisdom College எனும் இலவச  கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிட தொகுதி ஆஸ்திரேலியாவை சேர்ந்த Openfeed  நிறுவனத்தின் தலைவர் கல்விமான் கலாநிதி அலவி சரிப்டீன் அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது.


 இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 2024:12:29 அன்று நடைபெற்றது.


 இக்கட்டடத்தின் கீழ்த்தளம் மூன்று வகுப்பறைகளையும் ஒருகாரியாலயத்தினையும் கொண்டு உடன் பயன்படுத்தக்கூடியவண்ணம்  முழு தளபாட வசதிகளும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


CHA அமைப்பின் தலைவர், சட்டத்தரணி உமர் அலி எம் இஸ்மாயில் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் உரையாற்றிய கல்விமான் கலாநிதி அலவி ஷரீஃப்டீன் அவர்கள்.அனாதைகள் சமூகத்தில் முன் வருவதற்கு அனேகமாக சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை . அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களை கைதூக்கி விடுவதே எமது லட்சியமாகும். 


தகப்பனை இழந்த சிறார்கள் பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக தமது கல்வியை ஒரு போதும் இடைநிறுத்தி விடக்கூடாது, அவ்வாறு பிள்ளைகள் இடைநிறுத்தாமல் கல்வி  கற்பதற்கு உதவுவது நம் எல்லோருடைய தார்மீக பொறுப்பும்  கடமையுமாகும். கல்வியே அழியாச் செல்வம் அதனை சரியாக அனாதைகளுக்கு வழங்கினால் மிகுதியெல்லாம் நன்றாக நடந்து விடும்.


இந்தக் குழந்தைகளை நான் எனது பிள்ளைகளாகவே கருதுகிறேன். இவர்களுக்காக உழைப்பதே எனது குறிக்கோள்.அதில்தான் எனது நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கின்றது.


இன்று ஆரம்பிக்கின்ற இந்தக் கல்வி நிலையமானது இந்த பிராந்திய சிறார்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என்று தமது உரையில் குறிப்பிட்டார். 


இந்நிகழ்வில் இந்நிறுவனத்தில் கல்வி பயில்கின்ற சிறார்கள் மற்றும் அவர்களது தாய்மார்கள்  ஊர் பிரமுகர்களும். இந்நிறுவனத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் உட்பட CHA அமைப்பின் அங்கத்தவர்களுட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments

Powered by Blogger.