Header Ads



சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகையில் வீழ்ச்சி


இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், ஒரு சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. 


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால புள்ளிவிபரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.1 சதவீதத்தால் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப மொத்த வருமானம் அதிகரிக்கவில்லை எனவும், வருமானம் வெறும் 1.6 சதவீதத்தாலேயே உயர்வடைந்துள்ளது. 


ஒரு சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகை கடந்த ஆண்டை விட சுமார் 181 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது.  சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதி குறைவடைந்தமை அல்லது சிக்கனமாகச் செலவு செய்யும் நாடுகளிலிருந்து அதிகப்படியான பயணிகள் வருகை தந்தமை இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

No comments

Powered by Blogger.