புழக்கத்திலுள்ள பணத்தின் அளவு அதிகரித்துள்ளது - மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரத் தரவு அறிக்கையின்படி, கடந்த வாரத்தில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறி பெறுமதிகள் ஸ்திரமான நிலையில் காணப்பட்டன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளின் ரூபாய் பெறுமதி, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 1% இனால் குறைவடைந்துள்ளது.
புழக்கத்திலுள்ள பணத்தின் அளவு அதிகரித்துள்ளமை மற்றும் வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைப்பிலிட்டுள்ள தொகையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக, முந்தைய வாரத்தை விட 'உத்தியோகபூர்வ ஒதுக்கம்' அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Post a Comment