Header Ads



நாட்டில் நிலவும் அடிப்படைப் பிரச்சினை ரூபா மற்றும் டொலர் இல்லாததே


அரசாங்கத்தின் இந்த வருட வருமானம் 5.3 டிரில்லியன் ரூபா எனவும், அரசாங்கத்தின் மீளெழும் செலவினம் 5.6 டிரில்லியன் ரூபா. அதற்கமைய, அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு 300 முதல் 400 பில்லியன் ரூபா வரை பற்றாக்குறை நிலவுவதாக ன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 


நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை.


எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ரூபாவோ அல்லது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான டொலர்களோ எம்மிடம் இல்லை. நாட்டில் நிலவும் அடிப்படைப் பிரச்சினை ரூபா மற்றும் டொலர் இல்லாததே என்றார்.

No comments

Powered by Blogger.