தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த இடங்களில் இலங்கை
தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த 10 இடங்களின் வரிசையில் இலங்கை இடம் பிடித்துள்ளது.
அதன்படி இலங்கையின் சிறப்புமிக்க காலி நகரம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உண்மையான பயணிகளின் விமர்சனங்கள் மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வனவிலங்கு சுற்றுலா, தங்க நிற கடற்கரைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் காலி நகரம் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் பாலி தீவு, மொரிஷியஸ், மாலைத்தீவு, கரீபியன் கடலின் புனித லூசியா, வியட்நாம், கலிபோர்னியா, நாபா (Napa) இத்தாலியின் போசிடானோ, கென்யாவின் வடாமு, ஆன்டிகுவா ஆகிய இடங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Post a Comment