Header Ads



விழிப்பாக இருங்கள்


இலங்கையில் அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள்,  ஆள்மாறாட்டம் பண மோசடிகள் குறித்து எச்சரிக்கை.


உங்கள் கடனட்டை முடக்கப்பட்டுள்ளது, 24 மணித்தியாலங்களுக்குள் அதனைச் சரிசெய்யாவிடில் அது ரத்து  என sms அனுப்பப்படுகின்றன. அந்த இணைப்புகளை அழுத்துபவர்கள்  தேசிய அடையாள அட்டைஇலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை வழங்கத் தூண்டப்படுகின்றனர்.  மோசடிக்காரர்கள் அந்த விபரங்களைப் பயன்படுத்தி  OTP இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தைத் திருடுகின்றனர். 


ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக இலங்கை CERT (011 269 1062 / incidents@cert.gov.lk) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.