ஓலுகலவுக்கு முக்கிய பொறுப்பு
ஊழல் ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, சர்வதேச ரீதியாக தேடப்பட்டு வந்த பல முக்கிய குற்றவாளிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியவராகும்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை இலங்கைக்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய நபராக செயற்பட்டுள்ளார்.
குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதிலும், சர்வதேச ரீதியிலான குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளிலும் அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியாக அவர் கருதப்படுகிறார்.

Post a Comment