வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவரது பெயருக்குக் கீழே "வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி" (Acting President of Venezuela) என்ற பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
"வெனிசுவேலாவில் முறையான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவே அந்நாட்டை வழிநடத்தும்" என ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், அது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment