பதில் தாக்குதலின்போது எதிரில் இருப்பர் காவி, தேசிய உடை அணிந்தவரா என கரிசனை கொள்ளப் போவதில்லை
பதில் தாக்குதல் தாக்குதல் நடத்தும் போது எதிரில் இருப்பர்கள் காவி உடை அணிந்தவர்களா, கோட் சூட் அணிந்தவரா அல்லது தேசிய உடை அணிந்தவரா என்பது குறித்து கரிசனை கொள்ளப் போவதில்லை. அரசியல் செய்ய வருவதனால் அந்த ஆடைகளை களைந்து விட்டு வரவேண்டும். எதை அணிந்திருந்தாலும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கப் போவதில்லை. உரிய நேரத்தில் பதில் தாக்குதல் நடத்தப்படும்
1965ம் ஆண்டு முதல் தமது கட்சி எதிர்க்கட்சியில் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டது எனவும் துரோகிகளினால் தங்களது சகாக்கள் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகளில் முன்னெடுத்த அரசியலை விடவும் ஆளும் கட்சியில் அரசியல் செய்வது எளிதானது என தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அரச அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment