பிரித்தானிய தம்பதியினரின், தாராள மனசு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த நன்கொடை பற்றித் தெரிவித்து, ரிச்சர்ட் வுட் தம்பதியினர், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டின் இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களின் உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment